blogger templatesCSS Drop Down Menu
Style 2

How to Add Page Navigation Widget For Blogger

------------------------------------------------------------- -->

Wednesday, March 24, 2021

காரைதீவு சுவாமி விபுலாநந்தர் புகழ் கரையில்லா விண்ணை எட்டட்டும்





மரபுப்பா (எண்சீர் விருத்தம் 
( காய் - காய் - காய் - தேமா) 
தலைப்பு –காரைதீவு சுவாமி விபுலாநந்தர் புகழ் கரையில்லா விண்ணை எட்டட்டும் 
கவியாக்கம் - கவிஞர் வில்லூர் பாரதி (மட்டக்களப்பு)
--------------------------------------------------------------------------

மீனழகாய்ப் பாடுமட்டு வாமிமீது லாவி 
-----மீன்மகளிர் மெல்லிசையைக் கேட்டுணர்ந்து காதில் 
தேனொழுகக் கட்டுரைகள் தீந்தமிழில் தீட்டி
 -----திரைகடலாம் தமிழிசையைத் திசையாய்ந்து கூட்டி 
தானழகாய் யாழ்நூலைத் தந்தபெரும் ஞானி 
------தண்டமிழின் தகையான தமிழ்ச்சங்க ஏணி 
வானலாவ முத்தமிழை வளர்த்திட்ட வள்ளல்
 ------வாகனனார் புகழையிவ் வையகமே போற்றும்

 
காரேறு மூதூரின் கலைஞானச் சொத்து
 ------கண்ணம்மை கருவினிலே கண்டெடுத்த முத்து 
கூரேறு அறிவுடைகுஞ் சுத்தம்பி யென்பார் 
------குருவிடமோ யாப்பறிந்து கோத்திட்டார் வெண்பா
 பாரறிய அறிவியலும் பன்மொழியும் கற்று -
-----பண்டிதராய் பலபள்ளிப் பதவிகளு மேற்றோன் 
காரைமண் கடாட்சமுனி விபுலன்தன் நாமம்
 ------கரையில்லா விண்தொட்டுக் காணட்டும் கீர்த்தி 

ஏழிசைசே ரிசைத்தமிழை யியன்றவரை யாய்ந்து 
------ஏற்றினன்தன் ஆழிநிக ராய்புலமை நூலில் 
பாழடைந்து போகாமல் பழம்கருவி யாழைப்
 ------பாதுகாத்துப் பரம்பரைக்குப் பயனுறவே தந்தோன்
கீழடைந்த சமூகமதன்; கேடுகளைக் கண்டும் 
------கிளையமைத்துக் கல்வியாலே களைந்திட்டா ரன்று 
நாளென்றும் திங்களென்றும் நடத்துமித லெல்லாம் 
------நம்விபுலன் நனிபுகழை நல்கிற்றாம் பாரில் 

அவபாமி யம்மையா ரடிதொழுது மன்று 
------ஆன்மீக வழியதிலே ஆர்வமதைக் கொண்டார் 
சிவநெறியும் செந்தமிழும் சீர்பெறவே யன்னார்
 ------சிந்தையிற் கொண்டுதொண்டாற் றியின்பமதிற் கண்டார் அவப்பொழுதும் தவப்பொழுதாய் ஆர்வமுடன் கற்று
 ------ஆங்கிலத்தில் தமிழ்மொழியில் ஆற்றலது பெற்று புவனமெல்லாம் பூத்ததிங்கே விவுலநாமம் அன்னார்
 ------பூத்தநாளில் புகழோங்கச் செய்வோமே நாமும்

Thursday, September 4, 2014

கவிதரும் இனிய காலை...-




                  காரிருழகலக் கதிரோ னொளி யுமிழக்
                                  கா மலர் விரிந்து மணம் பரப்பும்
                 ஏரினை யேந்தியே யணியென ஏகலைவன்
                                ஏகும் காட்சி இணையிலா எழில் நிரப்பும்
                  நீரிடை யோடி மீன் நீந்தி விளையாடும்-கூடு
                               நீங்கிப் புல்லினம் பறந்திரையைத் தேடும்
                  பாரிடை மாந்தர் பழகிய பணிகள் தொடரும்
                              நிகரிலாக் காட்சிதான் நெஞ்சையள்ளும்

                 பாரிருலகற்றி பகலோன் பரப்பு மொளியில்
                                 பரந்த வான் வண்ணம் காட்டும்
                 ஓரிடம் திரண்ட மேகம் ஓடியாடியெங்கும்
                                ஓப்பிலா ஒப்பனைகள் சேர்க்கும்
                 பூவிடைத் தாவி வண்டு அமதமுண்ணும்
                                புல் நுனியில் பனித்துளிகள் மின்னும்
                நாரிடைச் சேர்ந்த வெள்ளைப் பூக்களென
                               பாலர் பள்ளி நாடும் காட்சி மனதையள்ளும்

                 கூரை முகடேறிக் கோழிகள் கூவும்
                              கண்மணியாள் முன்னெழுந்து கடமை தொடரும்
                 கரை சேரும் வடம் கண்டு கவலை கரையும்
                              கண்ணவனைக் கண்டு காதலால் மனம் நிறையும்
                 திரைகடலில் அலைகள் மோதி நுரை மறையும்
                             திரை மறைவில் திங்களின் கதிர் விரியும்
                 வரை மீது பணி மூட்டம் திரை போடும்
                              வாரி நீரள்ளிடவே வனிதையர் கூட்டம் கூடும்

                  மானிடமே மனங்களல்லாம் ஒருமை என்றே
                               வாங்கோடு மணிகளும் ஓங்கி ஒலிக்கும்
                  ஆணினமும் பெண்ணினமும் கூடி ஒன்றாய்க்
                               அலுப்பின்றி அலுவல்கள் அரங்கேறும்
                  மானினம் துள்ளியோட மந்திகள்  தாவும்
                               கானக் குயில் பாடி இசைகள் சேரும்
                   இனிய காலைப் பொழுது காணவென்
                               இரண்டு கண்கள் கானாதென்பேன்

Sunday, August 3, 2014

பாரதிதாஷன்-கவி வரிகள் வில்லூரான்

                   பாரதிதாஷன்


ஒரு சித்திரை மாதம்
கனகசபையும்
இலக்குமி அம்மாளும்
இணைந்த வேண்டுதலில்
பாண்டிச் சேரி வானில் - ஒரு
புத்திர நிலவு
புதிதாய் முளைத்தது

இருண்ட வீட்டில்
ஒரு குயிலின் குரல்
கூவிக் கொண்டது
சுப்பு ரத்தினம் இவன்
அப்பன் இட்ட பெயர்
பழனி அம்மைக்கு-ஒரு
அன்புப் பரிசானான்

தமிழ் இவனிடம்
பாடம் கற்றுக் கொண்டன
கவிதை இவனைக்
காதலித்தது
பாரதிக்கு இவன்
அடிமை

பாரதி பாட்டைப் பாடும்
இந்தக் குயில்
பாரதி பாடலில்
சக்தியைக் கண்டதால்
சரித்திரமானான்
அமைதி ஊமையை
அகிலமே பேசிக் கொண்டன
தங்கக்கிளிக்கு
தகுதியானான் என்று
அறிஞர் அண்ணாவும்
தன்னாவால்
புரட்சிக் கவிஞர் என்று
புகழ்சேர்த்தார்


நாடகம் இவனிடம்
நடை பயின்றன
அதனால்த்தான்
நாலைந்து மொழிகளுக்குள்
இவன் நகல்கள்
நடப்பட்டன
முத்திரையிலும் இவன்
முகம் விதைக்கப்பட்டது

தமிழ் அமுதுண்டு
புதியதோர் உலகம் நெய்த
புரட்சிக் கவிஞன்
புரிந்த லீலையில்
அழகின் சிரிப்பாய்
மலர்ந்தன
மல்ரவண்ணனோடு
மலர்கள் நான்கு
இவன் வாசம் வீசின

புதுச்சேரியும்  இவன்
புகழ்ச் சேரியாகியது
சட்ட மன்றில் இவன்
பாட்டு வேந்தனானான்

அழகின் சிரப்பால்
இருண்ட வீட்டில் இவன்
ஏற்றிய குடும்ப விளக்கு
அறுபத்தாறில் அணைந்தது
;உதித்த மாதமே
உதிர்ந்தது கவிதை மலர்
எழுதப்பட்டன
இவன் கல்லறையில்
கிறுக்கள் காரனென்றும்
கிண்டல் காரனென்றும்
கண்டெழுதும் கவிஞன் என்றும்
இவன் அமுத தாகமும்
தமிழின் மோகமும்
என்று தீருமோ?


வாழ்த்துகிறேன்

                     

           நூற்றாண்டு விழா மலருக்காக
மட்-விவேகானந்தா வித்தியாலயத்தின்
    ஆசிரியராக இருந்த போது எழுதியது
                          (19-01-2009)

                   வாழ்த்துகிறேன்



                         பேர்பெறு மகான் பேரருள் ஒழுகும்
                                          நீராரும் கடல் சூழ நின்றிலங்கும்
                         காரேறு மூதூர் முனி கால் பதித்த
                                         கவின் நிறை கல்லடிப்பதி திகழ்
                        சீருறுபல்கலை  இயற்று கலைக்கூடமென
                                         விளங்கு விவேகானந்தா வெனும் சாலை
                        நிகரிலா நீள் பணியில் நூறாண்டு நின்ற
                                          நின் திறம் வியந்து வாழ்த்துகிறேன்


                       பேரறிவாளர் பாவலர் எனப் பல
                                          பேறுகள் கண்டு பெருமையால் நிமிர்ந்து
                        நேரிய பணியில் நிகரிலா நோக்குடனுழைத்து
                                          உயரிய புகழுடன் ஓங்கியே வளர்ந்து
                        தாராளம் மிகு பணியால் தரணி மீதில்
                                          தக்கார் பலரை தகைமையாக்கி என்றும்
                        தீராத உன் இலட்சியத் தாகத்
                                          திறம் வியந்து வாழ்த்துகிறேன்.


                        பாரிய உந்தன் பணியில் மிஷனோடு-ஊர்ப்
                                           பற்றுள பலர் மிக விணைந்து நல்
                        உயரிய நோக்கில் உன்னத நெறியில்
                                           உயர்ந்திடவே எம்மவர் உலகில்
                        காரிய மாற்றி களம் தனில் நின்று
                                          கரம் தந்து உளம் சேர உருவாகி –பல்
                        அரிய கலை பல பயிற்று கலைக்கூடமே-நின்வளர்
                                          திறம் வியந்து வாழ்த்துகிறேன்


                        உத்தமர் தம் ஆசியுடன் உருவாகி
                                          உயர்பல சாதனையின் களமாகி
                       வித்தகத் திறனோடு விரும்பும் துறையேகி
                                          விளை பயிராம் மாணவரெம் நிலமாகி
                       சேர்த்த சீர் கல்வி சிறப்பொழுக்கம்
                                          சிறந்து ஓங்கு விவேகானந்தா வெனும்சாலை
                       பூத்த புகழ் 'நூற்றாண்டு' எனும் புதுமலர்
                                          நீடு நின்று 'பண' மணம் வீச வாழ்த்துகிறேன்



       வறட்சி நிலவும் இக்காலகட்டத்தில் உதித்த கவிதை (2-08-2014)
நீண்டதொரு கோடை................



மனித நேயம்
புதையுண்ட பூமி
சூரிய மகளின்
சுதந்திரக்காதலில்
சூடாகிக் கொண்டதோ?

மண்மாதா
மடியில் நெருப்பைக் கட்டிக்
கொண்டிருக்கிறாள்

இலைகள்
வேர்களோடு சண்டை
கிளைகள்
அடுப்பு வானத்தில்
இன்னொரு சூரியனாய்!

அறிவுக் கண்களுக்கு
இங்கே அகப்படாத அது
செவ்வாயில் சிறை வைக்கப்பட்டிருக்கிறதாம்
தேடலுக்கு மட்டும்
தீராத தாகம்

வெளிச்சமும் வெடிச்சத்தமுமாய்
பூமிப் புருஷனுக்கும்
வான மகளுக்கும்
இடையிடையே என்னதான்
வாய்த்தர்க்கமோ?

பாவம்
பச்சைக் குழந்தைகள்
சிரிக்க மறந்து விட்டன
ஏன் இப்படி ஒரு
நீண்ட கோடையோ?

நீண்டதொரு கோடை................

       வறட்சி நிலவும் இக்காலகட்டத்தில் உதித்த கவிதை (2-08-2014)
                                                நீண்டதொரு கோடை................



மனித நேயம்
புதையுண்ட பூமி
சூரிய மகளின்
சுதந்திரக்காதலில்
சூடாகிக் கொண்டதோ?

மண்மாதா
மடியில் நெருப்பைக் கட்டிக்
கொண்டிருக்கிறாள்

இலைகள்
வேர்களோடு சண்டை
கிளைகள்
அடுப்பு வானத்தில்
இன்னொரு சூரியனாய்!

அறிவுக் கண்களுக்கு
இங்கே அகப்படாத அது
செவ்வாயில் சிறை வைக்கப்பட்டிருக்கிறதாம்
தேடலுக்கு மட்டும்
தீராத தாகம்

வெளிச்சமும் வெடிச்சத்தமுமாய்
பூமிப் புருஷனுக்கும்
வான மகளுக்கும்
இடையிடையே என்னதான்
வாய்த்தர்க்கமோ?

பாவம்
பச்சைக் குழந்தைகள்
சிரிக்க மறந்து விட்டன
ஏன் இப்படி ஒரு
நீண்ட கோடையோ?

என்னதான் இருந்தாலும் பணம் இல்லையெனில்.! .....?

                                     
                                 என்னதான் இருந்தாலும் பணம் இல்லையெனில்.! .....?
        

                                        குணத்தில் பெரும் குன்றென நின்று
                                                      கூடி ஒன்றாய் வாழ்தலே நன்றென்று
                                        இனத்தால் மதத்தால் இங்கிலை பேதமென்றாகி
                                                     இரண்டறக் கலந்துமே இன்பமாய்
                                       மனத்தால் பிறர்க்கொரு போதும்
                                                      மாசிழையாது நீ வாழ்ந்தாலும்
                                      கணத்த பணம் இல்லையெனில்
                                                     கவனிக்க மாட்டார் உனையுலகினிலே


                                      நேர்மை நீதி சத்தியத்தில் நேரு
                                                      காந்திவழி ஜேசு புத்தன் போதனையில்
                                      ஆர்வலராய் அன்னை மடியிலணைவருமே
                                                    ஆதரவாய் ஆன்றும் அரவணைத்து
                                      ஓர் குலம் ஓர் மதம் என்று ஒற்றுமையாய்
                                                     ஒழுகு நன்னெறியில் நின்றாலும்
                                      கார் பங்களா காசு பணம் இல்லையெனில்
                                                      கவனிக்க மாட்டார் உனைக் காசினியில்


                                       ஈ எறும்புக்கும் இம்சைதான் செய்யாது
                                                      ஈர நெஞ்சத்தில் இரக்கமே கொண்டு
                                      பொய் களவு பொறாமை வஞ்சகம்
                                                      பொல்லாக் கோபம் யாவும் புறந்தள்ளி
                                      மெய்யால் மிகு பணிகள் தான் செய்து
                                                     மேன்மையுறுமெண்ணமுடன் மிளிர்ந்தாலும்
                                      பை நிறையப் பணம் இல்லையெனில்
                                                     பதர் என்றே உனைப் பார்ப்பாருலகில்










வாழ வழி காட்டு இறைவா! .......

                                       வாழ வழி காட்டு இறைவா! .......


                     இனத்தாலே மதத்தாலே இங்கில்லை
                                 பேதங்கள் என்றிணங்கி
                     குணத்தாலே நாம் ஒன்று கூடிக்
                                குதூகலித்துக் குவலயத்தில்
                     தனத்தாலும் தாம் தழைத்து
                                தான தர்மம் தானிழைத்து
                    தினத்தாலே நீள் தீர்க்க ஆயுளோடு
                                திகழ்ந்திடவே வழிகாட்டு-இறைவா!.......

                     பொறாமை வஞ்சகம் பொய் களவு
                                 போய் அகன்று எம் மனதில்
                    பொறுமையோடு உயர் சத்தியங்கள்
                                 பொதிந்து மனத்தூய்மையோடு
                     சிறுமை எல்லாம் சிதைந்தோடிச்
                           சீர் பதினாறும் பெற்று
              வறுமை நிலை நீங்கி யாவரும்
                            வாழ வழி காட்டு இறைவா !

              நேர்மை நீதி நின்றிலங்கி
                           நேரும் துன்பம் பிணி கலங்கி
             ஆர்வலராய் அனைவரும் இன்புறவே
                          ஆளுக்காள் அரும் உதவியாக
             மூளும் போரது முடிவுக்கு வந்துமே
                                                                          முஸ்லிம்தமிழ் சிங்களர்பறங்கியெல்லாம்
                                                                    ஓர் நாட்டில் ஓர் குலமாய் வாழ்ந்திடவே
                                                                              ஓர் வழி காட்டு இறைவா!

கடவுளைக் காணோம் இந்தக் கழியுகத்தில்......




           கடவுளைக் காணோம் 

          இந்தக்        கழியுகத்தில்...... 

அகல் விளக்கு தானொளிரப்                                              
          புறம் திரிந்த புலனெலாமொடுங்கி
அகம் அதனுள் அவன் நாமம்
          சிரமது கூப்பி சிந்தையிருத்திச்
சுகமான நெய்விளக்குச் சுடரொளி
          சுற்றியே காட்டக் கருவறையுள்
தேகமெலாம் தான் சிலிர்க்கத்
          தேவனே உன் திருவுரு கண்டேனன்று

மின்னொளி வர்ணஞாலம் மிகைபட
           கண்ணைலாம் கலங்கிக் கூசிட
மின்சார மேளம் இடி இடித்து
          மென்மைச் செவிப்பறை தான்கிழிய
பெண்ணவள் அணிகலனலங்காரத்தில்
           அசைந்திடும் கண்ணவளை மேய
உன்னை நான் காணேனிறைவா
           உண்மை இதனை நீ அறிவாய்

வெள்ளை வேட்டி தானுடுத்து
          விரி நுதல் மேல் நீறணிந்து
உள்ளமெலாம் உனையே நினைந்திட
          உன் வீடடைந்தேன் அன்று
வானவில்லின் நிறமதனில் வேட்டிகளும்
         வான வேடிக்கைகளும் வம்புகளும்
காணவே முடியுமிந்தக் கழியுகத்தில்
         கடவுளே கருவறைவிட்டெங்கு சென்றாய்